ஊடக அறிக்கை சர்வஜன அதிகாரம் – கட்சி யாழ்ப்பாணம் 01.06.2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் பெளத்த மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரக் கூடுகள் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்களால் கோப்பாய் பொலிஸில் இன்று முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்த பகவானின் வெசாக் பண்டிகையை முன்னிட்டு 30.05.2026 அன்று குறித்த மாணவர்களால் இந்த அலங்காரக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. எனினும், நேற்று அதிகாலை அவை சேதப்படுத்தப்பட்டிருப்பதை அவதானித்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இன்று (01.06.2026) காலை, முகாமைத்துவ […]