“வெசாக் நிகழ்வை ஏற்பாடு செய்தது யார்?” – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறிக்கையும் வெடித்துள்ள புதிய சர்ச்சையும்!

“வெசாக் நிகழ்வை ஏற்பாடு செய்தது யார்?” – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறிக்கையும் வெடித்துள்ள புதிய சர்ச்சையும்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியம் நேற்று வெளியிட்ட தமது அறிக்கையில் “recent Vesak celebration event organised by Sinhala students within our faculty” என மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். அதாவது இந்த நிகழ்வு முகாமைத்துவ பீட சிங்கள மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்கிறார்கள்.
கீழே பதிவிட்டிருக்கும் இருவரும் எதற்காக,
“யாழ்ப்பாண முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியமே இந்த வெசாக் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. அதன் தலைவர் உட்பட பெரும்பான்மையான உறுப்பினர்கள் தமிழ் மாணவர்களே ஆவர். எனவே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களும் தமிழ் மாணவர்களே ஆவர்.”
என ஒரு பொய்யை எழுதி அந்தப் பொய்யை சமூகமயப்படுத்த அரும்பாடுபடுகின்றனர்.
மாணவர் ஒன்றியமோ அல்லது தமிழ் மாணவர்களோ இந்த நிகழ்வை தாமாகவே ஏற்பாடு செய்திருந்தால் அது வரவேற்கத்தக்க விடயமே.
ஆனால் அவ்வாறு இல்லாத போதும் இது தமிழ் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்ற பொய்யை இவர்கள் சமூகமயப்படுத்த முயற்சித்ததன் ஊடாக அடைய விரும்பியது என்ன? 🤔🤔🤔

பின்குறிப்பு – தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இயங்கும் மாணவர் அமைப்புகளில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தமிழ் மாணவர்களாக இருப்பது ஒன்றும் விசேடமான விடயமும் இல்லையே!

Post Your Comment

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

Lorem ipsum dolor sit amet, consectetur adi piscing elit, sed dorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.
CONTACT US