ஊடக வெளியீடு

‘தமிழ் இனப்படுகொலை’ குறிப்பு தவறு: கனடா பிரதமருக்கு அருண் சித்தார்த் கண்டனக் கடிதம்

பெறுநர்: கனடா நாட்டின் கௌரவப் பிரதமர் திரு. மார்க் கார்னி அவர்கள், The Honourable Prime Minister of Canada, His Excellency Mr.Mark Carney கனடா பிரதமர் திரு. மார்க் கார்னி அவர்களால் 2026 மே 18 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்” (Tamil Genocide Remembrance Day) என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கையைப் பிரிப்பதற்காக வன்முறையையும் பயங்கரவாதத்தையும் மேற்கொண்டதன் காரணமாக சர்வதேச ரீதியாகத் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத […]

இறுதியுத்தத்தில் தமிழ் மக்களை புலிகள் சுட்டுக்கொன்றதை சர்வதேச அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து வெளியேற முயற்சித்த தமிழ் மக்களை பல இடங்களில் பாரிய அளவில் புலிகள் சுட்டுக்கொன்றார்கள் என்பதை பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன. முக்கியமாக, ஐக்கிய நாடுகள் சபையினால் 31 மார்ச் 2011 அன்று வெளியிடப்பட்ட நிபுணர் குழு அறிக்கை, மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch) எனப்படும் அமைப்பு 2009 பெப்ரவரி மாதம் தங்களது குழுவினரை இலங்கை அனுப்பி, யுத்த வலயத்திற்கு இரண்டு […]

பால்ராஜை பாராளுமன்றத்தில் நினைவுகூர்ந்த ரவிகரன் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் முறைப்பாடு

கடந்த 21/05/2026 அன்று நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றக் கூட்டத்தொடரில், இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை நினைவுகூர்ந்து உரையாற்றியமைக்கு தாம் கடுமையான கண்டனத்தை வெளியிடுவதாகவும் ரவிகரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகருக்கு முறைப்பாடொன்று அனுப்பி வைத்திருப்பதாகவும் யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார். இன்று (26/05/2026) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற […]

யாழ் பல்கலைக்கழக வெசாக் அலங்கார சேதம்: சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரக் கூடுகளைச் சேதப்படுத்திய இரு நபர்கள், தங்களது முகங்களைத் துணியால் மூடியபடி கடந்த 31 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து, இரவு சுமார் 10.50 மணியளவிலும் பின்னர் 12.50 மணியளவிலும் குறித்த அலங்காரக் கூடுகளைத் தாக்கி சேதப்படுத்தியதை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவதானித்துள்ளதாக முகாமைத்துவ பீடாதிபதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் இன்று வெளியாகியுள்ளன. இந்தத் தகவல்களையும் வாக்குமூலங்களையும் முறைப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு, குறித்த […]

‘கிட்டு’வை நினைவுகூர்ந்தவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?

சர்வஜன அதிகாரம் – யாழ்ப்பாண மாவட்டம் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால பாராளுமன்றத்தில் கூறியிருந்த போதும், “கிட்டு” எனப்படும் புலிப் பயங்கரவாதியை யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாக நினைவுகூர்ந்தவர்கள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என அருண் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார். சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் பிரபல அரசியல் செயல்பாட்டாளருமான அருண் சித்தார்த், இன்று தனது அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே […]

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

I am not here to repeat what is comfortable to hear. I am here to say what is deliberately unsaid.