கந்தன் கருணை சிறை படுகொலை குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் வரலாற்று விவாதம்

கந்தன் கருணை சிறை படுகொலை குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் வரலாற்று விவாதம்

0:00 / 0:00
HD
0 views

“வெலிக்கடை சிறையில் 1983 ஆம் ஆண்டு தமிழ் சிறைக்கைதிகள் 53 பேர் பேரினவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு கூச்சலிடும் தமிழ் தேசியவாதிகள் எவரும் பாசிசப் புலிகளின் சிறைச்சாலையான “கந்தன் கருணை” யில் புலிகளால் கொல்லப்பட்ட 63 பேர் வரையிலான தமிழ் இளைஞர்கள் தொடர்பில் மூச்சுக் கூட விடுவதில்லை.

இன்று (02/04/2026) பிரான்சில் இருந்து என்னைத் தொலைபேசியில்அழைத்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தான் முதல்முறையாக இந்த கந்தன் கருணை படுகொலை தொடர்பாக கேள்விப்படுவதாக தெரிவித்தான்.

புலிகளின் கடும்போக்கு ஆதரவாளனாக ஒரு காலத்தில் இருந்த தான் பாசிசப் புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாம் தொடர்பாகவும் தற்போது கந்தன் கருணை படுகொலை தொடர்பாகவும் நான் வெளியிட்டு வரும் ஒலிப்பதிவுகள் மற்றும் ஏனைய ஆதாரங்களைப் பார்த்த பின்னர் இந்தமாதிரி சொந்த இன மக்களையே படுகொலை செய்த ஒரு பயங்கரவாத பாசிச இயக்கத்துக்கு வரலாறு தெரியாமல் தான் ஆதரவாளனாக இருந்தமை தொடர்பில் வெட்கப்படுவதாக தெரிவித்தான்.

முன்னாள் புலிகளும், புலி ஆதரவு அரசியல்வாதிகளும், புலிப் பினாமிகளும், புலிகளுக்கு வெள்ளையடிக்கும் தமிழ் ஊடகங்களும், ஊடகவியலாளர்கள் அல்லது ஊடக ஜாம்பவான்கள் என்று தம்மைத்தாமே சொல்பவர்களும், புலிகளால் சம்பாதித்த, தற்போதும் சம்பாதித்து வரும் புத்திஜீவிகள் என்று சொல்லப்படுபவர்களும் ஏன் புலிகளின் கொடூரங்களை மறைக்க இத்தனை பிரயத்தனப்படுகிறார்கள் என்பதற்கு என்னுடன் தொலைபேசியில் பேசிய அந்த பிரான்ஸ் வாழ் இளைஞனின் வாக்குமூலமே சாட்சியாகும்.

புலிகளின் கொடூர வரலாற்றை இருட்டடிப்பு செய்வதன், ஒழித்து மறைத்து வைப்பதன் மூலம் தற்போதய இளைஞர் சந்ததியை தவறாக வழிநடத்த முயலும் இந்த போக்கு தகர்க்கப்பட வேண்டும்.

புலிகளின் கொடூரங்கள் அனைத்தும் நினைவேந்தப்பட வேண்டும். புத்தகங்களாக பதிப்பிக்கப்பட வேண்டும். ஆவணப்படங்களாக வெளியிடப்படவேண்டும். புலிகளின் கொடூர பயங்கரவாத பாசிச வரலாற்றை போதிக்கும் நூதனசாலைகள், நூலகங்கள், இணையத்தளங்கள் மற்றும் இந்த கொடிய வரலாற்றைக் கடத்தும் அனைத்தும் உருவாக்கப்பட வேண்டும். உருவாக்குவோம்.

அருண் சித்தார்த்

யாழ்ப்பாணம்

02/04/2026

+94774842464″ like that for this

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

I am not here to repeat what is comfortable to hear. I am here to say what is deliberately unsaid.