மாவீரர் நினைவேந்தல்கள் குறித்த விவாதங்களும் மறைக்கப்படும் உண்மைகளும்

மாவீரர் நினைவேந்தல்கள் குறித்த விவாதங்களும் மறைக்கப்படும் உண்மைகளும்

0:00 / 0:00
HD
0 views

இன்றைய ஈழத்தின் “மாவீரர்” நினைவேந்தல்களும் மறைக்கப்படும் உண்மைகளும்.
——————-
புலிகளினால் பலாத்காரமாக, ஆயுத முனையில் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இளைஞர்களில் பெரும்பாலானவர்களே இன்று “மாவீரர்கள்” என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
ஆனால், அவர்களில் பலர் புலிகளின் கொள்கையை அல்லது கேட்பாட்டை, சித்தாந்தத்தை ஏற்று (கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் என்பன புலிகளுக்கு இல்லை என்பது வேறு விடயம்) , அரசியல் தெளிவுடன், சுய விருப்பத்தால் அந்த அமைப்பில் இணைந்தவர்கள் அல்லர்.
மாறாக, அவர்களில் பலர் பலவந்தமாக கடத்தப்பட்டு, மிகக் குறுகிய காலம் மட்டுமே ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு, நேரடியாக போர்க்களங்களுக்கு அனுப்பப்பட்டவர்கள்.
இவர்கள் பலரும் உயிரிழப்பார்கள் என்பது தெரிந்திருந்தும், கட்டாயமாக பலியிடப்பட்ட அப்பாவி இளைஞர்களே.
இவர்களுக்கு “போராட்டமா அல்லது குடும்ப வாழ்வா” எனத் தேர்வு செய்யும் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளுக்கே திரும்பியிருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இவ்வாறு பலியாடுகளாக பயன்படுத்தப்பட்ட இளைஞர்களை “மாவீரர்கள்” எனப் புகழ்ந்து பாடுவதன் மூலம், அவர்களின் குடும்பங்கள் இன்று மனஅழுத்தத்திலும், விரக்தியிலும் வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.
பெற்றோர், மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் என அனைவரும் தங்கள் அன்புக்குரியோர் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்ற உண்மையை வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
“நடந்தது நடந்தேறிவிட்டது, இப்போது அது மாவீரமா, கட்டாய ஆட்சேர்ப்பா என்ன வித்தியாசம்?” என்ற மனநிலைக்கு தள்ளப்பட்ட அவர்கள், இன்று நடைபெறும் மாவீரர் நினைவேந்தல்கள் எனப்படும் நிகழ்வுகளில், விருப்பமின்றி கலந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர் என்பதே யாதார்த்தமாகும்.
இந்த நிகழ்வுகள் பல இடங்களில் பெரும் பணப்புழக்கமுள்ள ஒரு “வியாபாரமாக” மாறியுள்ளன.
இறந்த இளைஞர்களின் குடும்பங்கள் பலர் இன்று வறுமையில் வாடுகின்றனர். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் நிலையே பலருக்கு காணப்படுகிறது. சிலர் பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால் இதே நேரத்தில், இவர்களின் பெயர்களை பயன்படுத்தி நினைவேந்தல்கள் நடத்துபவர்கள், அரசியல் லாபம் தேடுபவர்கள், இந்தியாவில் அரசியல் செய்கிற சீமானும், ஐரோப்பிய நாடுகளில் செயல்படும் புலி பினாமி அமைப்புகளின் நிர்வாகிகளும், உள்ளூர் அரசியல்வாதிகளும் என பலர் கோடிகளில் செல்வம் சேர்த்து, சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர்.
இது ஒரு வேதனையான முரண்பாடு. உயிரிழந்தவர்களின் நினைவுகள், அவர்களின் குடும்பங்களின் துயரம், இவை அனைத்தும் உண்மையான மரியாதையுடன் அணுகப்பட வேண்டியவை. ஆனால், அது பல இடங்களில் உணர்ச்சிகளைப் பயன்படுத்தும் ஒரு அரசியல் மற்றும் பொருளாதார கருவியாக மாறியிருக்கின்றமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டு.
மாவீரர் நினைவேந்தல்கள் நடத்துபவர்களுக்கு யார் யாருக்கு எவ்வளவு கோடிக்கணக்கான காசுகள் எங்கிருந்து யார் யாரால் அனுப்பப்பட்டன என்கின்ற விபரங்களை எம்மால் மிகத் துல்லியமாக வழங்க முடியும்.
இன்றைய ஈழத்தின் உண்மை நிலையை நேர்மையாக எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. நினைவு கூர்வது தவறு அல்ல, ஆனால் உண்மையை மறைத்து, பலவந்தமாக உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்றை கொண்டாடுவது, இன்னும் பல குடும்பங்களின் வேதனையை நீடிக்கச் செய்கிறது.
சக மனிதனின் துன்பத்தை ஒரு வியாபார பண்டமாக்கி அதன் மூலம் பணம் உழைத்து தமது குடும்பங்களை சொகுசாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் கனவான்கள் பலரை நான் அறிவேன்.

தமிழ் மக்களே இன்று வடக்கு கிழக்கிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மாவீரர் நினைவேந்தல்கள் நடைபெறும் இடங்கள் அனைத்திலும் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் யார் என அவதானியுங்கள். தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட குழுவினரே இந்த ஏற்பாட்டுக் குழு என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.
இந்த ஏற்பாட்டுக் குழுவினரிடம் இரண்டே இரண்டு கேள்வி கேளுங்கள்..
உனது வீட்டில் மாவீரர் ஆகியவன் யார்? அவன் விபரம் என்ன?
பலரும் எனது மச்சான் மாமன் அப்பாவின் தம்பி எனக் கதையளப்பார்களே தவிர நேரடியாக யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட களத்தில் நின்று போராடி இறந்தவனின் தாய் நான் என்றோ அல்லது தந்தை நான் என்றோ, அண்ணன் தம்பி அல்லது மகன் மகள் என்றோ பதில்கள் உங்களுக்கு கிடைக்காது.
அவ்வாறு போலியாக பதில்கள் கிடைத்தால் ஆழமாக விசாரித்தால் எங்கு எந்தச் சமரில் எந்த ஆண்டு, தகட்டிலக்கம், எந்தப் படையணி என வினாக்களைத் தொடுத்தால் ஏற்பாட்டுக் குழுவில் இருக்கும் எவனிடமும் ஒழுங்கான பதில்கள் கிடைக்காது.
யாழ்ப்பாணத்தில் நல்லூர் பின்வீதியில் பல ஆண்டுகளாக மாவீரர் நினைவேந்தல்கள் கோடிக்கணக்கான காசில் செய்யும் சட்டத்தரணி மணிவண்ணனுக்கோ அல்லது பார்த்தீபனுக்கோ அவர்கள் வீட்டில் மாவீரர் ஆகியவர் யார் என விசாரித்துப் பாருங்கள். அல்லது காசு கணக்கு வழக்குகளைப் பகிரங்கப்படுத்த கோரிக்கை விடுத்து பாருங்கள். உங்களை துரோகி என்பார்கள். இவர்கள் வீடுகளில் மாவீரர் என நேரடி இரத்த உருத்துகள் எவரும் கிடையாது.
எங்கள் வீட்டில் செத்தால் தான் மாவீரர்களா? எங்களுக்கு இந்த தமிழ் ஈழ மண்ணில் செத்தவர்கள் எல்லோரும் எங்கள் வீட்டு அக்கா தங்கை அண்ணன் தம்பி தான் என சிவாஜி கனேசனை விட கெட்டிக்கார நடிகர்களாக சீன் போடுவார்கள்.

இரண்டாவது கேள்வி – இம்முறை மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு என்பது இறந்து போனவனின் பெற்றோர்களால் உருவாக்கப்பட்டு, அந்த நினைவேந்தல்களுக்கு வரும் பணம் முழுதும் அவர்களிடம் பையளிக்கப்பட வேண்டும் என கேட்டுப்பாருங்கள். உங்களை அந்த நினைவேந்தல் நடக்கும் இடத்துக்கு அண்மையில் கூட அடுக்க மாட்டார்கள். இதுவே இந்த மாவீர்ர் நினைவேந்தல்களுக்குப் பின்னால் இருக்கும் கோடிக்கனக்கான வியாபாரத்தின் பின்னால் இருக்கும் மறைக்கப்பட்ட உண்மையாகும்.
பின்குறிப்பு – இங்கு என்னுடன் பேசும் அக்காவின் மலசலகூடத்துக்கான உதவியாக அவர் கோருகின்ற 50 ஆயிரம் ரூபா பணத்தை உதவ விரும்பும் புலிகள் தவிர்த்த மாற்று இயக்க உறுப்பினர்கள் எவரேனும் விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

அருண் சித்தார்த்
யாழ்ப்பாணம்
19/03/2026
+94774842464

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

I am not here to repeat what is comfortable to hear. I am here to say what is deliberately unsaid.