நல்ல காலம்…” (ஒரு கசப்பான நையாண்டிக் கவிதை)”
- By arun_admin
“அவர்கள் எம் புத்தகங்களை எரித்து, துப்பாக்கிகளைத் திணித்தார்கள்.”
ஆனால்—
“நாங்களோ அதற்கு முதலே புலோலியிலும், புத்தூரிலும், கொள்ளையடித்தோம்”
“ஏழைகளின் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திலும் கொள்ளையடித்தோம்”
“குரும்பசிட்டி தமிழனான வன்னியசிங்கத்தின் அடைவு கடையிலும் கொள்ளையடித்தோம். தடுக்க வந்த ஐயாத்துரை குலேந்திரன் என்னும் இரு தமிழர்களையும் சுட்டுக் கொன்றோம்.”
“நீர்வேலியிலும் 90 இலட்சம் கொள்ளையடித்தோம்”
“கண்ணாடி பத்மநாதனை சகோதரப் படுகொலை செய்தோம்”
ஆனாலும்—
“நல்லகாலம் இந்தக்குற்றங்களுக்கு நாங்கள் பிடிபட முன்னரே அவங்கள் எங்கள் புத்தகங்களை எரித்தார்கள்”
“எங்களுக்கு இது சாட்டாக, வாய்ப்பாகப் போனது.”
“அவங்கள் எங்கள் புத்தகங்களை எரித்தார்கள், ஆகவே நாங்கள் துப்பாக்கிகளை தூக்கினோம் எனச் சாட்டு சொன்னோம்”
“அவங்கள் எங்கட புத்தகங்களை எரித்தது எங்களுக்கு வாய்ப்பாகப் போனதை நாங்கள் யாருக்குமே சொல்லவில்லை”
அதோடு மட்டும் இல்லாமல்—


“சிங்கள அடிவருடிகள் துரோகிகள் என்று துரையப்பாவையும் சுட்டுக் கொன்றோம். ஆனால் என் அப்பன் அதே சிங்களத்திடம் அரச உத்தியோகத்தில் 39 ஆண்டுகள் வெற்றிகரமாக சேவை செய்தார்.”
“நாங்கள் துரையப்பாவைச் சுடும் போதும் அவர் சிங்களத்திடம் சேவை செய்தார். அவங்கள் எங்கட புத்தகங்களை எரிக்கும் போதும் அவர் காமினி திசாநாயக்காவிடம் சேவை செய்தார்”
என்றும் சொல்லாமல் விட்டோம்.
—
கவிதை ஆக்கம்
திருமேனியார் வெங்கடாச்சலம்பிள்ளை திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன். 


⸻
“நாங்கள் துரையப்பாவை சுடச் சொல்லும் போதும் என் மகள் சுசிலாவின் கணவர் என் மருமகன் அல்பிறட் ஜெயரட்ணம் வில்சன் அரச ஊழியராக இருந்தார்”
“நாங்கள் வட்டுகோட்டையில் தனிநாடு கேட்கும் போது என் மருமகன் அரச ஊழியராக இருந்தார்”
“அவங்கள் எங்கட புத்தகங்களை எரிக்கும் போதும் என் மருமகன் ஜனாதிபதியின் ஆலோசகராகவே இருந்தார்.”
“அவங்கள் எங்களை 83 இல் அடிக்கும் போதும் என் மருமகன் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் அரசியலமைப்பு ஆலோசகராகவே இருந்தார்.”
ஆனால்—
“அவங்கள் எங்கட புத்தகத்தை எரிச்சதும் எங்களுக்கு அடிச்சதும் நல்ல காலம் எங்களுக்கு ஒரு சாட்டாக வாய்ப்பாகவே இருந்தது”
என்பதை மட்டும்
வரலாற்றின் அடிக்குறிப்பில் எழுத மறந்தோம்.
—
கவிதை ஆக்கம்
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் எனப்படும் S.J.V. செல்வநாயகம்.


⸻
புத்தகம் எரித்தது, தாழ்த்தப்பட்ட மக்களின் 16 பாடசாலைகளை எரித்தது போல ஒரு சம்பவம்;
அதை ஒரு சாட்டாக மாற்றியது வெள்ளாளிய மேட்டுக்குடி அரசியல்.
எதைச் சொல்ல வேண்டும், எதை மறைக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் கலையில் தமிழர்கள் ஆகச் சிறந்த கவிஞர்கள்.
—- அருண் சித்தார்த்
யாழ்ப்பாணம்
01/06/2026