யாழ். நாகவிகாரை வெசாக் நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர்: விளாடிவொஸ்டொக் பின்னணியும் சாய்முரளியின் மொழியாற்றலும்!
நேற்றய தினம் 30/05/2026 யாழ்ப்பாணம் நாகவிகாரையில் இடம்பெற்ற புத்த பகவானின் வைகாசி விசாகத் திருநாள் (வெசாக்) நிகழ்வுகளின் போது யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் திரு.சிறீ சாய்முரளி அவர்களைச் சந்தித்த வேளை …..
இலங்கைக்கு துணைத் தூதுவராக நியமனம் பெறுவதற்கு முன்னர் திரு.சாய்முரளி அவர்கள் ரஷ்யாவின் விளாடிவொஸ்டொக் (Consul General of India in Vladivostok Russian Federation) எனப்படும் முக்கிய நகரின் துணைத் தூதுவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் முக்கியமான கடற்படைத் தளமாக (Naval Base) விளாடிவொஸ்டொக் விளங்குகின்றது.
திரு சாய்முரளி அவர்கள் ஆங்கிலம்,ஹிந்தி,தெலுங்கு,தமிழ் மற்றும் ரஷ்யன் மொழிகளில் புலமையானர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அருண் சித்தார்த்
யாழ்ப்பாணம்
31/05/2026