ஐநா அறிக்கையின் 6 முக்கிய குற்றச்சாட்டுகள்!” – விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு அருண் சித்தார்த் எழுப்பியுள்ள அடுக்கடுக்கான கேள்விகள்!
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரித்து அறிக்கையிடுவதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தால் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி யஸ்மின் சூக்கா (Yasmin Sookq) அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சூக்கி டருஸ்மான் (Marzuki Darusman) ஆகிய மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்கள் அக்குழுவில் அங்கம் வகித்தனர்.
அந்த நிபுணர்கள் குழு யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்களாக தமது விசாரனைகள் மூலம் பெற்றுக்கொண்ட ஆதாரங்களை அடிப்படையாக்க் கொண்டு 2011 மார்ச் 31 ஆம் திகதி இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் வெளியிட்டார்கள்.
அந்த அறிக்கை புலிகள் மீது நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் கீழ்வரும் 6 குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
கீழே வருவது அந்த அறிக்கையின் ஒரு பகுதி:-
“ யுத்தத்தின் இறுதி கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிராக முன்வைக்கப்பட்ட நம்பகத்தன்மை வாய்ந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் தீர்மானம், ஆறு முக்கிய வகையிலான பாரதூரமான மீறல்களை வெளிப்படுத்துகிறது:
1. பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துதல்.
2. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களைக் சுட்டுக் கொல்லுதல்.
3. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு அருகில் இராணுவத் தளபாடங்களைப் பயன்படுத்துதல்.
4. சிறுவர்களைக் கட்டாயமாகப் போராட்டத்தில் ஈடுபடுத்தல் (கட்டாய ஆள்சேர்ப்பு).
5. பொது மக்களை கட்டாய உழைப்பல் ஈடுபடுத்தல்.
6. தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களைக் கொல்லுதல்.
2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து, மோதல் பகுதிகளில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களை புலிகள் மிக அருகிலிருந்து நேரடியாக சுட்டுக் கொல்லத் தொடங்கினர்.”
—- 196 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை புலிகள் மீது முன்வைத்த இந்த குற்றங்களுக்கு புலிகளின் ஆதரவாளர்கள் என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்..?
ஒத்துக்கொண்டு மன்னிப்பு கோரி தவறுகளைச் சரி செய முயற்சிக்கப் போகின்றீர்களா?
அல்லது ஐக்கிய நாடுகள் சபையையும் உங்கள் துரோகிப் பட்டியலில் சேர்த்து ஐக்கிய நாடுகள் சபையையும் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவு இயக்குவதாகப் பதில் சொல்லப் போகின்றீர்களா..?
அருண் சித்தார்த்
யாழ்ப்பாணம்
13/05/2026


