ரணசிங்க பிரேமதாசா–:contentReference[oaicite:0]{index=0} பேச்சுவார்த்தை காலமும் துணுக்காய் வதை முகாம் குற்றச்சாட்டுகளும்
1988 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி இலங்கையின் 3 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ரணசிங்க பிரேமதாச வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி கண்டியில் தலதா மாளிகை முற்றலில் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
அங்கு ஜனாதிபதியாக அவர் நிகழ்த்திய முதலாவது உரையில் புலிகளையும், ஜேவிபியினரையும் அரசுத் தரப்பில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்தார். பேச்சுவார்த்தைகளுக்கு வந்து ஜனநாயக வழிக்குத் திரும்பினால் சகல உதவிகளையும் செய்வதாகவும் வாக்களித்தார்.
புலிகளுக்கும் பிரேமதாச அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை உத்தியோகபூர்வமாக 1989 மே மாதம் ஆரம்பிக்கிறது.
ஆனால் அதற்கு முன்பே பிரேமதாசவின் பிரத்தியேக இல்லமான “சுச்சரித்த”வில் பல கட்ட இரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக, பிரேமதாசாவின் ஆலோசகராகப் பணியாற்றிய பிரட்மன் வீரக்கோன் எழுதிய Premadasa of Sri Lanka என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு பிரேமதாசாவின் உத்தியோகபூர்வ கோரிக்கைகளின் பின்னர், இந்திய இராணுவம் தமது முகாம்களுக்குள் முடங்கியதுடன் கட்டம் கட்டமாக வெளியேறத் தொடங்கியது.
பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலப்பகுதியான 1989 மே மாதம் முதல், பேச்சுவார்த்தைகள் முறிந்து யுத்தம் ஆரம்பித்த 1990 ஜூன் மாதத்துக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், புலிகள் நாடளாவிய ரீதியில் தமது எதிரிகளாகக் கருதிய மாற்றுக் கருத்தாளர்கள், மாற்று இயக்கத்தவர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள், இஸ்லாமியர்கள் என வகைத் தொகையில்லாமல் பலரை தமது “துணுக்காய்” சித்திரவதை முகாமுக்கு கொண்டு சென்று சித்திரவதைக்குட்படுத்தி படுகொலை செய்தனர்.
இந்த சித்திரவதை முகாம் குறித்து Amnesty International எனப்படும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆவணப்படுத்தியுள்ளது. அதேபோன்று UTHR-J எனப்படும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் விரிவாக அறிக்கையிட்டுள்ளது. சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு கைதிகளாக வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக இந்த அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த சித்திரவதை முகாமில்தான் எனது மனைவியின் தந்தையும் அவரது சகோதரர்கள் இருவருமாக மூவர் புலிகளால் கடத்தப்பட்டு கைதிகளாக இங்கு வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். 1. செல்லர் தங்கத்துரை 2. செல்லர் புவனேஸ்வரன் 3. செல்லர் அரியதுரை
ஆகிய மூவரை நாம் புலிகளின் பாசிசத்துக்கு இரத்தமும் சதையுமாக காவு கொடுத்திருக்கின்றோம்.
இந்தக் கொடிய கொடூரத்தை மறைக்கப் பல புல்லுருவிகள் இன்றும் முயற்சித்தாலும், நாம் இதற்கான நீதியைத் தேடிய நீண்ட நெடிய பயணத்தை பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றோம்.
இலங்கையினதும் சர்வதேச சட்டங்களினதும் அடிப்படையில், இந்தக் கொடூரக் குற்றத்தை எமக்கு புரிந்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், இன்றும் அந்தக் கொடூரத்தை ஆதரிப்பவர்கள் என பலரையும் நாம் தண்டிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இந்த மானுடகுலத்துக்கு எதிரான குற்றத்தைப் புரிந்து விட்டு இன்று ஒன்றும் தெரியாத மாதிரி வாழும் பலரை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.
ஹிட்லரின் வதைமுகாமில் கைதிகளைச் சித்திரவதை செய்து கொன்ற கொடூரக் கொலைஞன் Adolf Eichmann, இரண்டாம் உலகப் போரின் முடிவிற்கு 15 ஆண்டுகளுக்குப் பின்னர், 1960 ஆம் ஆண்டு ஆர்ஜென்டினாவில் வைத்து இஸ்ரேல் மொசாட்டினால் கைது செய்யப்பட்டு இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டு தூக்கிலிடப்பட்டான்.
இது போன்று துணுக்காய் வதைமுகாமுடன் சம்பந்தப்பட்ட யுத்த குற்றவாளிகளான (war criminals) புலிகள் உலகின் எந்த மூலை முடுக்கில் ஒளிந்து வாழ்ந்தாலும், அந்தக் கொலைகாரர்களைக் கொலரில் பிடித்து கொண்டு வந்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம்.
அருண் சித்தார்த் யாழ்ப்பாணம் 14/02/2026 +94774842464