விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் போர் கால மனித உரிமை குற்றச்சாட்டுகள்

விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் போர் கால மனித உரிமை குற்றச்சாட்டுகள்

0:00 / 0:00
HD
0 views
ஒரு போராட்டம் உண்மையான விடுதலைக்கான போராட்டமாக இருந்தால் மக்கள் தாங்களாக தன்னெழுச்சியாக அப்போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
புலிகளின் பாசிச சர்வாதிகார படுகொலை அரசியலைத் தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே புலிகள் அமைப்பில் 90 இற்குப் பிந்திய காலகட்டங்களில் மக்கள் விரும்பிச் சேர்வது வீழ்ச்சியடையத் தொடங்கியது.
ஒரு விடுதலைப் போராட்டம் மக்களால் நிராகரிக்கப்படும் போது அது தோல்வியடையத் தொடங்கி விடும். உள் முரண்பாடுகள் கிளர்த்தெழும். உள் இயக்க கிளர்ச்சிகள் தோன்றும். இவ்வாறுதான் புலிகள் இயக்கம் 86-87 இல் ஏனைய தமிழ் சகோதரர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்த காலகட்டத்திலேயே பெருவாரியான மக்களுக்கு புலிகள் மீது வெறுப்பும் அருவருப்பும் தோன்றத் தொடங்கியது. 90 ஆம் ஆண்டு இஸ்லாமிய மக்கள் மீது பாரிய இனச்சுத்திகரிப்பும் படுகொலைகளையும் மேற்கொண்ட போது தமிழ் பேசும் மக்களாக நாம் வெட்கித் தலை குனிந்தோம். இந்த பாசிசப் புலிகளை அடியோடு வெறுத்தோம். 1985 ஆம் ஆண்டு அநுராதபுரத்தில் சாமான்ய சிங்கள மக்களை நூற்றுக்கணக்கில் சுட்டுக்கொன்ற போது புலிகளை நாம் அருவருப்போடே பார்த்தோம். காட்டுமிராண்டிகளாக கணித்தோம்.
அன்றே நாம் கூறினோம் புலிகளின் தூப்பாக்கிகள் எந்த மக்களின் விடுதலைக்காக தாம் போராடுகின்றோம் எனக் கூறிக்கொண்டார்களோ அந்த மக்களுக்கு எதிராகவே திரும்பும் என. அதே போன்று இறுதி யுத்தகாலத்தில் தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து தப்பிச் செல்லும் சாமான்ய மக்களைக் கூடச் சுட்டுக் கொன்றார்கள் பாசிசப் புலிகள்.
மக்களை அடக்குமுறையில் இருந்து விடுவிக்கப் போராடும் ஒரு போராட்டத்தையே விடுதலைப் போராட்டம் என்பர். அவ்வாறான போராட்டத்தில் மக்கள் தாமாகவே இணைந்து கொள்வர்.
ஆனால் இங்கு நடந்தது என்ன? எந்த வித அரசியல் அறிவும் அற்ற விளையாட்டுப் பருவத்தில் இருந்த பாலகர்களை, சிறுவர் சிறுமியரை, 13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறார்களை, அவர்களது பெற்றோர்களிடம் இருந்து ஆயுதமுனையில் வலு கட்டாயமாகப் பிரித்தெடுத்து கொண்டு சென்ற புலிகள் அந்தச் சிறார்களை யுத்த முனையில் பலி கொடுத்தார்கள்.
இந்த தகப்பன் எம்மிடம் பேசும்போது, தான் 17 ஆண்டுகளாக இரவுகளில் நிம்மதியாக உறங்குவதில்லை என்றார்.
தனது 17 வயது மகனை 2009 ஆம் ஆண்டு இரணைப்பாலையில் தனது கண் முன்னே புலிகள் வலு கட்டாயமாகப் பிடித்துக் கொண்டு செல்வதைப் பார்த்த பின்னர் எந்த தகப்பனால் நிம்மதியாக உறங்க முடியும்.
தனது 17 வயதுப் பச்சைப் பாலகன் யுத்தகளத்துக்கு ஒரு சிறார் போராளியாக வலு கட்டாயமாக கொண்டு செல்லப்படுவதைப் பார்த்த பின்னரும் எந்த தகப்பனால் அதன் பின்னர் நிம்மதியாக உறங்க முடியும்.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் என்னும் பாலகனின் படுகொலையை நான் ஏற்றுக்கொல்லவில்லை. மனிதாபிமானம் உள்ள மனிதர்களாக நாம் அந்தப்படுகொலையைக் கண்டிக்கின்றோம். ஆனால் ஒரு பாலச்சந்திரனுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் சில தமிழ் பாசிஸ்டுகளே ஒன்றைப் பு்ரிந்து கொள்ளுங்கள்.!
இந்த தந்தையின் 17 வயது மகனும் இன்னொரு பாலச்சந்திரன் தான் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது போன்ற எத்தனை எத்தனை “பாலச்சந்திரன்களை” பிரபாகரன் எனும் அந்த ஒரு பாலசந்திரனின் அப்பா கொலைக்களத்துக்கு வலு கட்டாயமாக அனுப்பியிருப்பார் என எண்ணிப் பாருங்கள்.
கர்மா கொடியது. அது அநீதி இழைப்பவர்களையும், கொடியவர்களையும் என்றேனும் ஒரு நாள் தண்டித்தே தீரும். 2009 மே மாதம் கர்மா பிரபாகரனுக்கும் அவன் பாசிசப் படைக்கும் தண்டனை கொடுத்ததே ஈழத்தமிழர் வரலாறு.
அருண் சித்தார்த் யாழ்ப்பாணம் 10/04/2026 +94774842464

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

I am not here to repeat what is comfortable to hear. I am here to say what is deliberately unsaid.