கந்தன் கருணை படுகொலைகளை நினைவுகூர்ந்த அருண் சித்தார்த்; புலிகளின் உள் படுகொலைகள் குறித்து குற்றச்சாட்டு
கந்தன் கருணை படுகொலை வாரம். ————- புலிப் பயங்கரவாதத்தின் தமிழ் இன அழிப்பே “கந்தன் கருணைப் படுகொலைகள் என்றால் அது மிகையில்லை.
பேரினவாதத்தின் இனவெறிக்கு ஒரு “வெலிக்கடை” படுகொலைகள் போல் பாசிசவாதத்தின் நரவேட்டைக்கு ஒரு “கந்தன்கருணை” படுகொலைகளை நாம் உதாரணமாக குறிப்பிடலாம். ———- “கந்தன் கருணை” யில் பாசிசப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட எமது சகோதர தமிழ் இளைஞர்களை நாம் இந்த 39 ஆண்டில் நினைவுகூருகின்றோம். அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடைய பிராத்திப்பதோடு இந்த இழப்பின் மனவடுக்களோடு வாழும் கொல்லப்பட்டவர்களின் உறவுகளின் துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம். ——
1987 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி சதாசிவம் கிருஷ்ணகுமார் என அழைக்கப்படும் புலிப் பாசிசவாதியான “கிட்டு” தனது காதலியான சிந்தியா என்பவரை யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள அவரது வீட்டில், ஒவ்வொரு நாளும் இரவு வேளையில் வழமையாக சந்திப்பது போல் அன்றும் சந்தித்து விட்டு செல்லும் போது கிட்டு சென்ற வாகனத்தின் மீது புலிகளின் உள் முரண்பாடு காரணமாக “கிரனைட்” தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. (இந்த தாக்குதல் மாத்தையாவின் பணிப்பின் பேரில் தீப்பொறி குழுவால் நிகழ்த்தப்பட்டதாக பின்னர் வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.)
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கிட்டுவின் கால் ஒன்று பின்னர் அகற்றப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்குப் பழி வாங்கும் முகமாக பாசிசப் புலிகளால் “கந்தன் கருணை” என்னும் இல்லத்தில் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மாற்று இயக்கங்களைச் சேர்ந்த, மாற்றுக் கருத்துகளைக் கொண்டிருந்த சுமார் 63 பேர் வரையிலான தமிழ் இளைஞர்கள், அருணா (செல்லச்சாமி செல்வகுமார்) எனப்படும் புலிப் பயங்கரவாதியின் தலைமையில் புலிகளின் குழுவொன்றினால் அடுத்தநாள் 30/03/1987 அன்றிரவு சிறைக்கூடத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தமிழின அழிப்புக்கு காரணமான யுத்த குற்றவாளிகளாக பின்வரும் புலிப்பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
1) அருணா எனப்படும் செல்லச்சாமி செல்வகுமார் (இறந்துவிட்டார்)
2) சிவபரன் அல்லது சத்தியா என அழைக்கப்படும் நபர் இன்னமும் பிரான்சில் வாழ்வதாக தகவல்
3) சுதுமலை வரதராஜசர்மா இன்னமும் ஜேர்மனியில் வாழ்வதாக தகவல்.
4) ஊத்தை ரவி, சின்ன காந்தி, கேடி, ராசா, அமுதன், பாலா, ஜீவன், சாரா. (இவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் எமக்கு தரலாம்)
5) மாவீரன் எனக் குறுந் தமிழ் தேசியவாதிகளால் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட கொலைஞன் கிட்டு.
6) அகிம்சாவாதியாக ஊதிப் பெருப்பிக்கப்பட்ட கொலைஞன் திலீபன்.
அருண் சித்தார்த் யாழ்ப்பாணம் 30/03/2026 +94774842464