டெலோ தலைவர் சிறிசபாரத்தினம் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று: புலிகளின் சகோதரப் படுகொலையை நினைவுகூர்ந்த அருண் சித்தார்த்

டெலோ தலைவர் சிறிசபாரத்தினம் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று: புலிகளின் சகோதரப் படுகொலையை நினைவுகூர்ந்த அருண் சித்தார்த்

0:00 / 0:00
HD
0 views
டெலோ (TELO) எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான அமரர் சுந்தரம்பிள்ளை சிறிசபாரத்தினம் அவர்கள், புலிகளின் யாழ் மாவட்டப் பொறுப்பாளர் சதாசிவம் கிருஷ்ணகுமார் எனப்படும் கிட்டுவால், யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இன்றாகும்.
1986 ஆம் ஆண்டு இதுபோன்ற மே மாதம் இன்று போன்ற ஒரு 6 ஆம் திகதி அன்று, டெலோ (TELO) இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவரான சிறிசபாரத்தினம், புலிகளின் சகோதரப் படுகொலையால் பலியெடுக்கப்பட்டார்.
1952 ஆம் ஆண்டு சுந்தரம்பிள்ளை – ராஜலட்சுமி எனப்படும் பெற்றோருக்கு, யாழ்ப்பாணம் கல்வியங்காடு என்னும் இடத்தில், 5 பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளையாக சிறிசபாரத்தினம் பிறந்தார். இவருக்கு கந்தசாமி, செல்வரத்தினம் என்ற இரண்டு சகோதரர்களும், பாக்கியம், ஜெயராணி என்கின்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.
கல்வியங்காடு செங்குந்தா இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், தனது பதின்ம வயதில் “ஈழ விடுதலை” போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருடன் சேர்ந்து, 70களிலேயே தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) எனப்படும் டெலோவை உருவாக்கிய ஸ்தாபகர்களில் ஒருவர் இவர்.
1986 ஆம் ஆண்டு சித்திரை (ஏப்ரல் – April) மாதம் 29 ஆம் திகதி அளவில், புலிகள் தமது இயக்கமான புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்களை அழிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். தனது ஏகபோக அதிகாரத்தை பிரபாகரன் நிலைநாட்டவும், தான் மட்டுமே தமிழர்களின் தலைவர் என்றும், தனது அமைப்பான புலிகள் மட்டுமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும் தம்மைத் தாமே துப்பாக்கி முனையால் அறிவித்துக்கொண்ட புலிகள், ஹிட்லரின் பாசிச சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தனர். புலிகள் 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் ஏனைய இயக்கங்களைத் தடை செய்து படுகொலை செய்யும் சகோதரப் படுகொலைகளை முதலில் டெலோவிடம் இருந்தே ஆரம்பித்தனர்.
டெலோ உறுப்பினர்களை விரட்டி விரட்டி படுகொலை செய்த புலிகள், மே 6 ஆம் திகதி அவ்வியக்கத்தின் தலைவரான அமரர் சிறிசபாரத்தினம் அவர்களை கோண்டாவில் இருந்த புகையிலைத் தோட்டம் ஒன்றில் வைத்து சுட்டுப் படுகொலை செய்தனர்.
அருண் சித்தார்த் யாழ்ப்பாணம் 06/05/2026 +94774842464

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

I am not here to repeat what is comfortable to hear. I am here to say what is deliberately unsaid.