இறுதியுத்தத்தில் தமிழ் மக்களை புலிகள் சுட்டுக்கொன்றதை சர்வதேச அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து வெளியேற முயற்சித்த தமிழ் மக்களை பல இடங்களில் பாரிய அளவில் புலிகள் சுட்டுக்கொன்றார்கள் என்பதை பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன.
முக்கியமாக, ஐக்கிய நாடுகள் சபையினால் 31 மார்ச் 2011 அன்று வெளியிடப்பட்ட நிபுணர் குழு அறிக்கை, மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch) எனப்படும் அமைப்பு 2009 பெப்ரவரி மாதம் தங்களது குழுவினரை இலங்கை அனுப்பி, யுத்த வலயத்திற்கு இரண்டு கிழமைகள் விஜயம் செய்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கை, அதேபோல் Amnesty International எனப்படும் சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கைகள் ஆகிய அனைத்தும், புலிகள் இறுதியுத்த காலத்தில் தமிழ் மக்களைச் சுட்டுப் படுகொலை செய்தமையை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளன.
அத்தோடு சர்வதேச மன்னிப்புசபை புலிகளினால் நிகழ்த்தப்பட்ட யுத்த குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரனை ஒன்று அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.
26 ஏப்ரல் மாதம் 2011 சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்ட இலங்கையின் இறுதியுத்தம் தொடர்பான அறிக்கையில் மன்னிப்புசபை இவ்வாறு கூறுகின்றது:-
“Amnesty international also calls on the national authorities of other countries to take exercise universal jurisdiction to investigate crimes identified in the report and to prosecute them in their national courts where appropriate “An international inquiry, especially into the violations committed by the LTTE, will greatly help the process of reconciliation in SriLanka” added Sam Zarifi, Amnesty international’s Asia – Pacific Director.
“இந்த அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட குற்றங்களை விசாரிக்கவும், தேவையான இடங்களில் அவற்றைத் தங்களது தேசிய நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்து சட்டநடவடிக்கை எடுக்கவும், பிற நாடுகளின் தேசிய அதிகாரிகள் சர்வதேச நீதித்துறை அதிகாரத்தை (Universal Jurisdiction) பயன்படுத்த வேண்டும்” என சர்வதேச மன்னிப்புசபை- அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International)வும் அழைப்பு விடுத்துள்ளது.
“குறிப்பாக விடுதலைப் புலிகள் (LTTE) மேற்கொண்ட மீறல்களைப் பற்றிய ஒரு சர்வதேச விசாரணை, இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்கு மிகுந்த உதவியாக இருக்கும்” என்று சர்வதேச மன்னிப்புசபையின் – அம்னஸ்டி இன்டர்நேஷனலின் ஆசிய–பசிபிக் பிராந்திய இயக்குநர் சாம் ஸரிஃபி (Sam Zarifi) மேலும் தெரிவித்துள்ளார்.
ஆகவே புலிகளின் குற்றங்களை விசாரித்து அந்தக் குற்றங்களுடன் தொடர்புடைய முந்நாள் புலிகள் இப்போது அகதிகளாக புலம்பெயர்ந்து எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்தந்த நாடுகளில் இவர்கள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச மன்னிப்புசபை மிகத் தெளிவாக தெரிவித்துள்ளது.
பின்குறிப்பு – ஆங்கிலம் வாசிக்க தெரியாத பிரபாகரன் என்னும் 8ஆம் வகுப்பு தற்குறியைப் பின்தொடரும் ஈழத்து தற்குறிகளுக்காக சர்வதேச அறிக்கைகளில் தெரிவித்திருக்கும் விடயங்களைத் தமிழிலும் தெரவித்துள்ளேன். அதையும் மீறி நாம் தற்குறித்தனமாகவே கட்டாயத்துக்கு இருப்போம் எனச் சிந்திக்கும் தற்குறிகள் தாராளமாக பின்னூட்டத்தில் வந்து கதறி இந்தப் பதிவைப் பலர் பார்ப்பதற்கு உதவி செய்யலாம் 😜.
அருண் சித்தார்த் யாழ்ப்பாணம் 24/05/2026 +94774842464