சிந்திக்கத் தெரிந்த, சுதந்திரமான எண்ணங்கள் கொண்ட மனிதன் எவனும் இந்த மூடனை தனது தலைவனாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
கொலை செய்ய மட்டுமே தெரிந்த 8 ஆம் வகுப்பு கூட தாண்டாத இந்த முட்டாள் அணில்களையும் ஓணான்களையும் கட்டபொல்லால் சிறுவயதிலேயே கொன்று மகிழும் மனநோயாளி என இந்நபரின் வரலாற்றை எழுதிய பலரும் சொல்கின்றார்கள.
இவன் ஓரு நவீன ஹிட்லர். இந்த நபரால் 50 வருடங்கள் இலங்கை வாழ் தமிழ் மக்கள் பின்தள்ளப்பட்டார்கள் என்பதே உண்மை.
—- அருண் சித்தார்த்
யாழ்ப்பாணம்.
பிரபல பத்திரிகையாளர் எம்கே நாராயண் சுவாமி தன்னுடைய ‘தி ரௌட் ஆஃப் பிரபாகரன்’ (The Route of Prabhakaran) எனும் புத்தகத்தில், “பிரபாகரனின் ஒவ்வொரு வார்த்தையும் சட்டம் போன்றது. அவரை யாரும் சவால் செய்ய முடியாது. அவருக்கு முன் தலை தாழ்ந்து, அவர் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, உங்களால் தமிழ் ஈழத்துக்காக போராட முடியும்,” என எழுதியுள்ளார்.
“அவருடன் உடன்படவில்லையென்றால், ஒன்று நீங்கள் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேற வேண்டும், அல்லது உலகை விட்டு நீங்க வேண்டும். அவரை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர் ‘துரோகி’ என அறிவிக்கப்படுவார். சோவியத் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தன்னுடைய எதிரிகளை எப்படி நடத்தினாரோ, அவர் அப்படி நடத்தப்படுவர்.”